வெள்ளத்தில் மீட்க வராத கவுன்சிலர்கள் மீது அடங்கா கோபத்தில் பொதுமக்கள்... தப்பி ஓடி தலைமறைவு!!
சென்னை: பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த தங்களை மீட்க வராத பகுதி கவுன்சிலர்கள் மீது சென்னை பொதுமக்கள் கடும்கோபத்தில் உள்ளனர். இதனால் சென்னையில் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்.
வரலாறு காணாத கனமழை, அடையாறு, கூவம் ஆறுகளின் வெள்ளமானது சென்னை பெருநகரத்தை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டது. வழக்கமாக கரையோர மக்கள்தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர்.

ஆனால் இம்முறை சென்னையின் பல பகுதிகளிலும் பல அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பெரும்பகுதியான மக்கள் வீடுகளை மட்டுமல்ல.. அரும்பாடுபட்ட வாங்கி வைத்த அனைத்து பொருட்களையும் பறிகொடுத்துவிட்டனர்.
ஒரே இரவில் ஏதுமற்றவர்களாகிப் போனதால் அவர்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்... இப்படி பெருந்துயரத்தில் இருந்து தங்களை மீட்க கவுன்சிலர்களோ எம்.எல்.ஏ.க்களோ எம்.பி.க்களோ உடனடியாக ஓடிவரவில்லை என்ற கோபத்தில் மக்கள் உள்ளனர்.
அதுவும் யார் யாரோ தன்னார்வலர்கள் வீடு தேடி வந்து நிவாரணப் பொருட்களை கொடுக்கும் போது எதற்கெடுத்தாலும் கமிஷன் அடித்து கோடீஸ்வரர்களாகிப் போன இந்த கவுன்சிலர்கள் எட்டிகூட பார்க்கவில்லை... அட குடிக்கக் கூட தண்ணீர்கொடுக்கவில்லையே என்ற பெருங்கோபத்துடன் இருக்கிறார்கள் பொதுமக்கள்.
இதனால் பல இடங்களில் கவுன்சிலர்கள் வீடு முற்றுகையிடப்பட்டு வீட்டுக்குள் பதுங்கியிருந்தவர்களை இழுத்து வந்து இடுப்பளவு வெள்ளத்தில் பார்வையிட வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எழுப்புகிற முதல் கேள்வி,, ஓட்டுக் கேட்க வந்தீங்கதானே.. இப்ப சாகப்போறப்ப ஏன் வந்து பார்க்கலை என்பதுதான்..
மக்களின் இந்த கோபம் நீண்டநாட்கள் தகிக்கவே செய்யும்!
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications