For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களின் அட்டகாசத்தால் மாநில கல்லூரிக்கு கெட்டப்பெயர்.. கல்லூரிக்கு சென்று கமிஷனர் அட்வைஸ்!

பேருந்தில் மாணவர்கள் செய்த அட்டகாசத்தால் மாநில கல்லூரிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளதாக கல்லூரிக்கு நேரில் சென்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள்- வீடியோ

    சென்னை: பேருந்தில் மாணவர்கள் செய்த அட்டகாசத்தால் மாநில கல்லூரிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளதாக கல்லூரிக்கு நேரில் சென்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    சென்னை, மாநில கல்லுாரி மாணவர்கள் சிலர், மாநகர பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு ஓடும் பேருந்தில், பட்டாக்கத்தியை சாலையில் தேய்த்த படி பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து விசாரித்த போலீசார் பட்டாக்கத்தியுடன் மக்களை மிரட்டிய மாநிலக் கல்லூரி மாணவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மாணவர்கள் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிகளை அச்சுறுத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கமிஷனர் சந்திப்பு

    கமிஷனர் சந்திப்பு

    இந்நிலையில் சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களை இன்று காலை சந்தித்தார் காவல் ஆணையர் விஸ்வநாதன். இறை வணக்க கூட்டத்திற்கு பிறகு காவல் ஆணையர் விஸ்வநாதன் மாணவர்களுடன் உரையாற்றினார்.

    உதவ வேண்டும்

    உதவ வேண்டும்

    அப்போது மாணவர்கள் தங்களின் ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் நல்ல விஷயங்களை அதிகம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    தவறான செயல்கள்

    தவறான செயல்கள்

    விரும்பியதைப் படியுங்கள், பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். சில மாணவர்கள் செய்த தவறான செயல்தான் மக்களிடையே வேகமாக சென்று சேருகிறது.

    மாநில கல்லூரிக்கு கெட்டப்பெயர்

    மாநில கல்லூரிக்கு கெட்டப்பெயர்

    ஒரு சிலரின் தவறால் அனைத்து மாணவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும். பேருந்தில் மாணவர்கள் செய்த அட்டகாசத்தால் மாநில கல்லூக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது.

    தெளிவு பெறுங்கள்

    தெளிவு பெறுங்கள்

    எனவே நல்ல விஷயங்களை மட்டுமே மாணவர்கள் செய்ய வேண்டும். தமிழ் இலக்கியத்தையும், வரலாறையும் படித்து தெளிவு பெறுங்கள். படித்ததை வாழ்க்கையில் பயன்படுத்த முயலுங்கள்.

    மாணவர்களுக்கு அட்வைஸ்

    மாணவர்களுக்கு அட்வைஸ்

    படிப்பைத் தவிர டைப்பிங் உள்ளிட்ட பிறவற்றையும் பயிலுங்கள் நான் டைப்பிங் படித்தது எனது ஐபிஎஸ் பயிற்சியின்போது உதவியது. இவ்வாறு மாநில கல்லூரி மாணவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவுரை வழங்கினார்.

    English summary
    Chennai Police commissioner meets Presidency college students today after they threatening public in Bus. Students should use their power for good things.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X