மீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டை.. 13 ரவுடிகள் உள்பட 94 பேர் கைது
மீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 ரவுடிகள் உள்பட 94 பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை அருகே மீஞ்சூரில் போலீஸார் விடிய விடிய நடத்திய அதிரடி சோதனையில் 13 ரவுடிகள் உட்பட 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உள்ள ரவுடிகள் சிலர் சென்னை புறநகர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்திக்கு வந்த ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, மீஞ்சூர் பகுதியில் நேற்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ,போலீஸார் விடிய விடிய சோதனை நடத்தினர்.

தேடுதல் சோதனையில், 1 ஒரு எஸ்பி, 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 7 இன்ஸ்பெக்டர்கள், 212 காவலர்கள் என மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, சென்னை புறநகர் பகுதிகளான வல்லூர், பட்டமந்திரி, வடசென்னை அனல் மின் நிலையம், மணலி ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகப்படும் வகையில் இருந்த 94 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கிரிமினல் கிரைம் டிராக்கிங் நெட்வொர்க் என்ற சோதனையின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. அதன்படி, கைதானவர்களில் 13 பேர் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு 76 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த 13 ரவுடிகளில் தனுஷ், சூர்யா, ஷோபன்பாபு உள்ளிட்ட ரவுடிகளும் அடங்குவர். இவர்களை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு பூந்தமல்லி பகுதியில் ரவுடி பினுவின் கூட்டாளிகள் 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.இதே போல, திருவள்ளூரில் 53 ரவுடிகளை போலீஸார் திடீர் சோதனை மூலம் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
'கர' ஓடிடியில் பட்டையைக் கிளப்புது! ரிவ்யூவை நம்பி தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள் குமுறல்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications