சென்னை துப்பாக்கிச் சூடு: மோப்பநாய் மூலம் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை!
சென்னை: சென்னை மேடவாக்கத்தில் நகைக்கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மேடவாக்கத்தில் நகை கடை நடத்தி வருபவர் சுனில்லால். புதன்கிழமை இரவு 9 மணியளவில் இவரது கடைக்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், சுனில்லாலிடம் தனக்கு ரூ.5 லட்சம் பணம் கொடு என்று கேட்டான்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுனில்லாலை நோக்கி சுட்டான். இதில் சுனில்லாலின் இடதுபக்க தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் நகைக்கடையில் இருந்து ஓடி பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களின் அறையில் சென்று நின்று விட்டது.
இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் உட்பட 30 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications