மாணவர்கள் போராட்ட பீதி... மெரினா கடற்கரையை 'இழுத்து மூடிய' சென்னை போலீஸ்!
மாணவர்கள் போராட்ட பீதியில் சென்னை மெரினா கடற்கரையை இழுத்து மூடியது சென்னை போலீஸ்.
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்ட பீதியால் சென்னை மெரினா கடற்கரையின் அனைத்து நுழைவு பகுதிகளையும் பேரிகார்டர்களை வைத்து இழுத்து மூடியுள்ளது சென்னை போலீஸ்.
உலகை திரும்பிப் பார்க்க வைத்தது ஜல்லிக்கட்டுக்கான மெரினா புரட்சி. அதைத் தொடர்ந்து சென்னை போலீசாருக்கு மெரினாவுக்குள் யார் நுழைந்தாலும் பீதிதான்.

அதுவும் கருப்பு சட்டையுடன் நுழைந்துவிடாலே போதும்... அலறி அடித்துக் கொண்டு வெளியேற்றி விடுகிறது போலீஸ். மெரினா மீண்டும் போர்க்களமாகிவிடக் கூடாது என்பதில் சென்னை போலீஸ் படு தீவிரமாக உள்ளது.
இந்த கண்காணிப்பை மீறி நேற்று ஜெயலலிதா நினைவிடத்தை மாணவர்கள் போர்க்களமாக்கி போராடினர். இதனை எதிர்பார்தா சென்னை போலீசார் ஒட்டுமொத்தமாக சென்னை மெரினா கடற்கரையையே இன்று இழுத்து மூடிவிட்டது.
மெரினா கடற்கரைக்குள் செல்லும் அனைத்து நுழைவுப் பகுதிகளையும் பேரிகார்டர்களால் இழுத்து மூடியுள்ளது போலீஸ். மெரினா பகுதியே மயான அமைதியாக காட்சியளிக்கிறது. மெரினாவில் போடப்பட்டிருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டன. மெரினாவை பார்க்க எவருக்குமே சென்னை போலீஸ் அனுமதிக்கவில்லை.












Click it and Unblock the Notifications