பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவி செய்யும் கரங்களே இப்போது தேவை- நடிகர் விவேக்
சென்னை: "பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவி செய்யும் கரங்களே இப்போது தேவை" என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை தமிழக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் கடலூர் மக்களை இந்த மழை ரொம்பவே பாதித்து விட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல்வேறு மக்களும் உதவிகள் செய்து வரும் நிலையில் நடிகர் விவேக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

விவேக்
சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விவேக் தற்போது கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். நடிகன் என்பதைத் தாண்டி சமூகப் பணிகளிலும் அக்கறை காட்டுபவர் விவேக். அப்துல்கலாமின் சிந்தனை மற்றும் செயல்களால் ஈர்க்கப்பட்ட விவேக் கலாமின் வழிகாட்டுதல் படி சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தார்.

மகனின் மரணம்
சந்தோஷத்துடன் சென்று கொண்டிருந்த விவேக்கின் வாழ்க்கையில் கடந்த அக்டோபர் மாதம் விதி சோகத்தைக் கொண்டு வந்து சேர்த்தது. விவேக்கின் ஒரே மகன் பிரசன்னகுமார்(13) கடந்த அக்டோபர் மாதம் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் மகன் இறந்த ஒரு மாதத்திலேயே நடிகர் விவேக் தனது சோகத்தை மறைத்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

ஹைதராபாத்
இங்கே மழை தீவிரமாகி மக்கள் துன்பங்களுக்கு ஆளானதைப் பார்த்த விவேக் தனது ட்விட்டரில் இப்படிப் பதிவு செய்தார். "நான் ஹைதராபாத்தில் சிக்கிக் கொண்டேன். மழையால் என் சக மக்கள் துன்பப்படுவதைக் காணும்போது எனது இதயத்தில் இருந்து ரத்தம் வழிகின்றது".
|
மக்களுக்கு உதவி
ஹைதராபாத்தில் இருந்து கடந்த 5 ம் தேதி திரும்பிய விவேக் உடனே நடிகர்கள் கார்த்தி, விஷால், குஷ்பூ சுந்தர் மற்றும் பிறருடன் இணைந்து மக்களுக்கு உதவிகளை செய்திட ஆரம்பித்தார். மேலும் "மழையால் தவிக்கும் மக்களுக்கு பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவும் கரங்களே இப்போது தேவை" என்று விவேக் குறிப்பிடுகிறார்.

உணவு மற்றும் பெட்ஷீட்
மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜாபர்கான்பேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பெட்ஷீட் ஆகியவற்றை விவேக் வழங்கினார்.
|
புகைப்படங்கள் இல்லை
"மக்களின் துன்பத்தைக் காணும்போது மனதை என்னவோ செய்கிறது" என்று குறிப்பிடும் விவேக் மக்கள் உதவிகளைப் பெறுவதை புகைப்படங்கள் எடுத்துப் பதிவிடுவதில்லை. மேலும் தனது விருகம்பாக்கம் அலுவலகம் மூலமாகவும் உதவிகளை ஒருங்கிணைத்து விவேக் வழங்கி வருகிறார்.
|
வண்டி பாரம் குறைந்தது
"பாதிக்கப்பட்ட அசோக் நகர் அரங்கநாதன் பாலம் அருகே உள்ள மக்களுக்கு இப்போதுதான் இனிப்பான பன்களையும், குடிதண்ணீர் பாட்டில்களையும் வழங்கித் திரும்பினோம். வண்டியின் பாரம் குறைந்தது ஆனால் இதயம் கனக்கிறது" என்று சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
மழையால் தவிக்கும் சென்னை மக்களுக்கு தனது சோகங்களை மறந்து உதவிகள் செய்யும் விவேக் அவர்களின் நல்ல உள்ளம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்!
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications