வட கிழக்குப் பருவ மழை.. சென்னைக்கு 45% அதிகம்... தமிழகத்திற்கு 100 மி.மீ குறைவு!
சென்னை: தமிழகத்தில் கடந்த 28-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதுவரை சராசரியாக தமிழ்நாட்டில் 350 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது வழக்கமான சராசரியை விட 100 மி.மீ குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004 முதல் 2011 வரை இயல்பான அளவு அல்லது அதற்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது. ஆனால் 2012-ல் 16 சதவீதம் குறைவாகவும், 2013-ல் 33 சதவீதம் குறைவாகவும், 2014-ல் 2 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

இதில் தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை சென்னை உள்பட வட மாவட்டங்களில் அவ்வளவாக பெய்யவில்லை.
இதனால் சென்னையில் உள்ள ஏரிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. சோழவரம் ஏரி 6 மாதமாக வறண்டு கிடந்தது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளிலும் தண்ணீர் குறைந்து சொற்ப அளவே காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உள்பட தமிழகம் எங்கும் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளன. வயல்வெளி கிணறுகள், குடிநீர் கிணறுகள் அனைத்தும் இப்போது பெய்து வரும் மழையில் நிரம்பி விட்டன. இதனால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் சராசரி மழை அளவு 450 மி.மீட்டர் ஆகும். இதுவரை சராசரியாக தமிழ்நாட்டில் 350 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது வழக்கமான சராசரியை விட 100 மி.மீ குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 700 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 45 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல்சின்னம் காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications