சென்னை கிளப்பில் வேட்டிக்கு தடை- கருணாநிதி கடும் கண்டனம்!
சென்னை: சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்து வந்த நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி: உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் மற்றும் இரண்டு உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களும் வேட்டி கட்டிக்கொண்டு சென்ற காரணத்தால், தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்களே?

பதில்: தமிழர்களின் கலாசாரத்தின் அடையாளம் வேட்டி. அதை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிப்பது கண்டிக்கத்தக்கதாகும். பொதுவாக தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்குவருபவர்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வர வேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்குவதற்கு அரசே முன்வந்து அறிவுரை வழங்குவதுதான், இதுபோன்ற நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு கேள்வி-பதில் அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.