தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்டிட விபத்து : தேசிய பேரிடர் மீட்புக் குழு
சென்னை: போரூரில் நேற்று 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தான் இதுவரை தென்னிந்தியாவில் நடந்த மிகப்பெரிய கட்டிட விபத்து என தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தக் கட்டிட விபத்து தான் சென்னையில் இதுவரை நடந்த கட்டிட இடிபாடு விபத்துகளில் மிகவும் பெரியது எனக் கூறப்படுகிறது.

அடுக்குமாடிக் கட்டிடங்கள்...
சென்னையின் புறநகர் உட்பட அனைத்து பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் அதிகரித்து வருகின்றன.

சொந்தவீடு கனவு...
நடுத்தரவர்க்கத்தினர் பலர் அதிகரித்து வரும் வாடகைக்குப் பயந்து சொந்த வீடு வாங்க விரும்புவதே இந்த அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு முக்கியக் காரணம் எனலாம்.

அதிகரிக்கும் தேவை..
தேவையின் காரணமாக பழைய வீடுகள் கூட இடித்து புதிய அடுக்குமாடிக் கட்டடங்களாக உருமாறி வருகின்றன. இதனால் அருகருகே தொடர் அடுக்குமாடிகள் அமைக்கப் படுகின்றன.

முதல் விபத்து...
இந்நிலையில், நேற்றைய விபத்து போன்று சம்பவம் இதுவரை சென்னையில் நடைபெற்றது இல்லை என்றும், இது தான் முதல் கொடூர விபத்து எனவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications