வடியாத வெள்ளம்... திறக்கப்படும் பள்ளிகள்... எங்கே செல்வது?- தவிப்பில் ‘நிவாரண முகாம்’ மக்கள்!
சென்னை: சென்னையில் மழை குறைந்து வெயில் அடிக்கத் துவங்கியுள்ள நிலையில், நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் வேறு எங்கே செல்வது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.
அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மழை வெள்ளத்தில் ஏறக்குறைய மூழ்கி மீண்டது என்றால் மிகையில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த மக்கள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை...
மழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் காலியாக இருந்த வகுப்பறையில் வெள்ளத்தில் பாதித்த மக்கள் தங்கியிருந்தனர்.

நாளை திறப்பு?
இந்நிலையில், நேற்றும் இன்றும் சென்னையில் மழை குறைந்து, வெயில் அடிக்கிறது. இதனால் நாளை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் எனத் தெரிகிறது. பல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோருக்கு நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயக்கும் என போன் வாயிலாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.

நிவாரண முகாம் மக்கள்...
இதனால், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இன்னமும் தங்கள் வீடுகளில் வெள்ளம் வடியாத நிலையில், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டால் வேறு எங்கு செல்வது என்ற குழப்பம் அவர்கள் மத்தியில் உள்ளது.

எங்கே செல்வது?
இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம் தேவை என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நோய்த் தொற்றும் அபாயம்...
பல இடங்களில் ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் மழை நின்றும், தொடர்ந்து குடியிருப்புகள் நீரில் மூழ்கியபடியே உள்ளன. எனவே, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பினால் நோய்த் தொற்று அபாயமும் ஏற்படும் என்ற அச்சமும் மக்களிடையே உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications