அக்டோபர் 10ம் தேதி ஆஜராக வேண்டும்... மு.க. ஸ்டாலினுக்கு சென்னை கோர்ட் உத்தரவு
சென்னை: அக்டோபர் 10ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை கோர்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை 22ம் தேதி சட்டசபைக்கு வெளியே ஸ்டாலின் பேட்டி அளித்த போது, தி.மு.க.,வினர் சபைக்கு வருவது முதல்வருக்கும் அமைச்சருக்கும் சபாநாயகருக்கும் பிடிக்கவில்லை என கூறியிருந்தார். இது, முதல்வரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறி, முதல்வரின் சார்பில், ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஸ்டாலின் நேற்று ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பப்பட்டிருந்தது; ஆனால், ஸ்டாலின் ஆஜராகவில்லை.
அதற்குப் பதில் ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முக்கிய கூட்டத்தில், கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால், மற்றொரு தேதியில் ஸ்டாலின் ஆஜராவார் என தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி ஆதிநாதன், அக்டோபர் 10ம் தேதி மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications