சென்னையிலும் தீவிரம்.. போராட்டத்தில் குதித்தனர் பொறியியல், சட்ட மாணவர்கள்
சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இன்று பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் என அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைப் போன்றே, சென்னையிலும், பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளிருப்புப் போராட்டம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் வாசல் முன் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.
வகுப்புப் புறக்கணிப்பு
இதனைப் போன்றே அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தினார்கள். மாணவர்கள் அனைவரும் இன்று வகுப்பைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி வாசலில் ஒன்று கூடினார்கள். பின்னர், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
காளைகள் பாதுகாப்பு
ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடர்ந்து நடத்தப்படாமல் போகுமானால் காளைகள் இனம் அழிந்துவிடும். இதன் தொடர்ச்சியாக விவசாயமும் பாதிக்கப்படும் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
பீட்டாவுக்குத் தடை
விலங்குகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டா அமைப்பு மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேலும், ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை என்ற நிலையில் தேவையில்லாமல் வழக்குத் தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications