மருமகனை துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ... மகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்ததால் ஆத்திரம்
சென்னை : மருமகன் மீது காவல் துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சங்கரபாண்டியன். இவரது மகள் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், தனது மருமகனுடன் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், தனது மகள் மீண்டும் அவரது கணவருடன் சேர்ந்து வாழ்வதை விரும்பாத காவல்துறை உதவி ஆய்வாளர் சங்கரபாண்டியன், தனது மருமகனை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
மயிலாப்பூர் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள மசூதி அருகே, இச்சம்பவம் நிகழ்ந்தது. மயிலாப்பூர் பகுதியில் வந்து கொண்டிருந்த தனது மருமகனுடன் சங்கரபாண்டியனுக்கு தகராறு ஏற்பட்டதாகவும், இதையடுத்து திடீரென ராஜசேகர் மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில், குண்டுகள் பாய்ந்த நிலையில் காயமடைந்த ராஜசேகர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications