தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.... எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னை : ஈரப்பதம் குறைந்து வறண்ட சூழ்நிலை நிலவுவதால் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ள நிலையில் வானிலைஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் வரும் தினங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்டமாக 6 டிகிரிவரை வெப்பநிலை அதிகரித்ததாக கூறிய அவர், நாளை தொடங்கி 28ம் தேதிவரை அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரிவரை உயர வாய்ப்புள்ளது என்று கூறினார்.
கடலோர மாவட்டங்களில் காற்றின் திசையை பொறுத்து வெப்பநிலை மாறுபடும் என்று தெரிவித்தார். சென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications