Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷாரய்யா, உஷாரு! சென்னை மாநகர பஸ்களில் கைவரிசை காட்டும் சேலம் 'பெண் பிக்பாக்கெட்' கும்பல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்கள் அதிகரித்துள்ளனர். கைதானவர்களில் பெரும்பாலான பெண்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

'பிக்பாக்கெட் ஜாக்கிரதை' என்று டவுன் பஸ்களுக்குள் எழுதிப்போடும் அளவுக்கு சென்னையில் திருட்டு தலைவிரித்தாடி வருகிறது. பிக்பாக்கெட் என்றாலே, கன்னத்தில் மச்சம், கழுத்தில் கர்ச்சீப், கைலி கட்டிக் கொண்டு வருவார்கள் என்பதெல்லாம் திரைப்படத்தோடு சரி. நிஜத்தில் டிப்-டாப்பாக, ஷூவெல்லாம் மாட்டிக் கொண்டு வந்துதான் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்.

தொழிலில் குதித்த பெண்கள்

தொழிலில் குதித்த பெண்கள்

எனவே, எந்த ஒரு ஆண் பக்கத்தில் நின்றாலும் சக பயணிகள் அடிக்கடி பர்சை தொட்டுப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்கின்றனர். ஆனால் அந்த நிம்மதியையும் கெடுக்க, பிக்பாக்கெட் 'தொழிலில்' பெண்களும் குதித்துவிட்டனர். இதுவரை பஸ்சில் இடிப்பதற்காக பெண்களிடம் நெருங்கிய ஆண்கள், இப்போது பிக்பாக்கெட்டுகள் புண்ணியத்தால், விட்டால் போதும் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர்.

கையும் களவுமாக கைது

கையும் களவுமாக கைது

சில தினங்களுக்கு முன்பு ஒரு சம்பவம். குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், துர்கா நகரை சேர்ந்தவர் சவுந்தரி (32). இவர், பல்லாவரம் அருகே பஸ்சில் சென்றபோது, இவருடையே கைப்பையில் இருந்து ஒரு பெண் ரூ.7 ஆயிரத்தை திருடினார். இதை கண்ட சக பயணிகள், அந்த பெண்ணை பிடித்து பல்லாவரம் போலீசில் ஒப்படத்தனர். விசாரணையில் அவர் பெயர் கோகிலா (29) என்பது தெரியவந்தது.

கைப்பை போச்சு

கைப்பை போச்சு

கடந்த திங்கள்கிழமை மாலையில் மற்றொரு சம்பவம் இதேபோல நடந்துள்ளது. தியாகராய நகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ் பரங்கிமலை பட்ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது 2 பெண்கள் ஒரு கை பையுடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள். அப்போது பஸ்சுக்குள் இருந்து எனது கைப்பையை காணோம் என்று ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டது.

விரட்டி பிடித்த பெண் போலீசார்

விரட்டி பிடித்த பெண் போலீசார்

நல்லவேளையாக பஸ் நிறுத்தத்தில் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த பெண் கான்ஸ்டபிள்கள் இரண்டுபேர் நின்று கொண்டிருந்தனர். நடந்தவற்றை யூகித்துக் கொண்ட பெண் போலீசார், பிக்பாக்கெட் அடித்துவிட்டு இறங்கி ஓடிய இரு பெண்களையும் பிடித்து பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இளம் பெண்கள்

இளம் பெண்கள்

போலீசார் நடத்திய சோதனையில் 2 பெண்களிடமும் இருந்து ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பெண்களும் பஸ்களில் ஏறி பயணிகளிடம் இருந்து கைப்பை, பணம் ஆகியவற்றை திருடி வருவது தெரிய வந்தது. இதில் ஒரு பெண்ணின் பெயர் ஜோதி (27), மற்றொரு பெண் ஜமுனா (29) என்றும் தெரிய வந்துள்ளது.

சேலம் கும்பல்?

சேலம் கும்பல்?

இதில் விஷயம் என்னவென்றால், இரு சம்பவங்களிலுமே கைது செய்யப்பட்ட பெண்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். சேலத்தை சேர்ந்த ஒரே கும்பல்தான் இந்த பிக்பாக்கெட்டுகளில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இனிமேலாவது பயணிகள் பெண் பிக்பாக்கெட்டர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+