For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருந்தாத ஜென்மங்கள்: வர்தாவால் கொந்தளித்த கடலுடன் சென்னைவாசிகள் செல்ஃபி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்தும் பலர் மெரினா கடற்கரைக்கு சென்று வர்தா புயலுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சென்னையில் மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

Chennaiites take selfie with Vardah

புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சென்னை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மக்களை கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக கடற்கரை பக்கம் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது. கடலோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை மக்கள் சிலர் மெரினா கடற்கரைக்கு சென்று புயலால் கொந்தளித்த கடலுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

English summary
Some Chennai people went to Marina beach on monday and took selfie with Vardah cyclone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X