'ட்விட்டர்' கோதாவில் குதித்த ப.சி.... "திருக்குறள்" மூலம் மோடி அரசு மீது கடும் தாக்கு!
சென்னை: சமூக வலைதளமான ட்விட்டரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இணைந்திருக்கிறார். தமது ட்விட்டர் பக்கத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விமர்சித்திருக்கிறார் சிதம்பரம்.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் ட்விட்டரையே ஆயுதமாக்கிக் கொண்டு அதிரடியாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமும் களமிறங்கியுள்ளார்.
Hello! On #Twitter for sharing serious commentary on contemporary issues...
— P. Chidambaram (@PChidambaram_IN) May 25, 2015 இன்று @PChidambaram_IN என்ற முகவரியில் ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார் சிதம்பரம். இன்று காலை முதலே ப.சிதம்பரம் தொடர்ந்து பல பதிவுகளை போட்டு வருகிறார்.
முதல் ட்வீட்டாக, "ஹலோ... நான் ட்விட்டரில் இணைந்துவிட்டேன். சமகால பிரச்சினைகள் குறித்து சில முக்கிய விவகாரங்களை எழுப்புவதற்காக இணைந்துள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது ட்விட்டர் பக்கத்தை முதல் 3 மணி நேரத்தில் சுமார் 5,000 பேர் பேர் ஃபாலோ செய்துள்ளனர்.
'A king with no guardian or critic to rebuke him, will be ruined even if he has no enemies'
- Thirukkural 448
— P. Chidambaram (@PChidambaram_IN) May 25, 2015 மேலும், 448வது திருக்குறளை சுட்டிக்காட்டி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்" ஆங்கிலத்தில் சுட்டிக்காட்டி பதிவு செய்திருந்தார்.
மத்தியில் மோடி ஆட்சி ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில், கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்' என்ற குறளை சிதம்பரம் பதிவு செய்து கோதாவில் குதித்திருக்கிறார்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications