காலியாகும் சிதம்பரம் கூடாரம்.. வாசன் கட்சியில் இணைந்த சிவகங்கை காங்கிரசார்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தொடங்க உள்ள கட்சியில் சிவகங்கையை சேர்ந்த ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். திருச்சியில் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் நாள்தோறும் ஜி.கே.வாசனை சந்தித்து கட்சி தாவி வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது ஜி.கே.வாசனின் பரம எதிரியான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் நேற்று சென்னையில் வாசன் கட்சியில் இணைந்தனர். சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த சிவகங்கை மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடி, முன்னாள் மாவட்ட செயலாளர் துரை கருணாநிதி, காரைக்குடி நகர செயலாளர் குமரேசன், முன்னாள் மாவட்ட பொது செயலாளர்கள் அழகேசன், சார்லஸ் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் வாசனை சந்த்இருந்தனர். நேற்று காங்கிரசை சேர்ந்த 100 பேர் சென்னையில் வாசனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தனர்.
இது குறித்து சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடி கூறுகையில், காங்கிரசை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் கோஷ்டிகள் உருவாகின்றன. கட்சியினரின் குறையை யாரிடம் போய் சொல்வது என்றே தெரியவில்லை. ப.சிதம்பரம் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளோம். ஆனால் சில காரணங்களால் அவரை நெருங்க முடியவில்லை. நான் மட்டும் அவரை பார்ப்பதை விட ஆதரவாளர்களுக்கு எதுவும் செய்ய முடிவதில்லை. இதனால் புதிதாக ஏற்பட்டுள்ள வாசன் தலைமையிலான கட்சியில் சேர முடிவு செய்தோம் என்றார்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications