சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விடுவிப்பு!
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும்வரை அவரே பதவியில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தீப், 1989ல் தமிழழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 2011ம் ஆண்டு, நவம்பர் முதல், வேளாண்மை துறை முதன்மை துறை செயலாளராக பணியாற்றி வந்தார். இதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி, தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சந்தீப் சக்சேனா பொறுப்பேற்ற பிறகு வெளியான வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும் ஸ்ரீரங்கம் மற்றும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்களில் சக்சேனா, ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பின.
இந்நிலையில், சந்தீப் சக்சேனா தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையே மத்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து இதற்கான உத்தரவு வந்ததாகவும், அது வெளிப்படையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய அதிகாரி நியமிக்கப்படும்வரை சந்தீப் சக்சேனாவே தமிழக தேர்தல் அதிகாரியாக தொடருவாராம். பதவிக்கு வந்து சரியாக ஓராண்டுக்குள், அந்த பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புதிய அதிகாரியை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications