காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்.. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாளை முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வரியம் அமைக்க உத்தரவிட்டு 6 வார காலம் அவகாசம் அளித்தது. இந்த 6 வார கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.

இதனிடையே காவிரி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கடைசி நேரத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் நாளை காலை 10 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!