For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப்ரவரி மாத இறுதிக்குள் கூவத்தூர் பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.. செந்தில்பாலாஜி கணிப்பு

பிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.. செந்தில்பாலாஜி- வீடியோ

    கோவை: பிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆவர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவராக உள்ளார்.

    இவரும் தனது தலைமைக்கு போட்டியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுவரை டிடிவி தினகரன் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியின் அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என என கூறி வந்தார்.

    பிப். இறுதிக்குள் வீட்டுக்கு

    பிப். இறுதிக்குள் வீட்டுக்கு

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி மாத இறுதிக்குள் கூவத்தூர் பழனிசாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

    கூவத்தூர் பழனிச்சாமி

    கூவத்தூர் பழனிச்சாமி

    மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கூவத்தூர் பழனிச்சாமி என விமர்சித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்றும் போக்குவரத்துத் துறையை வருமானத்தின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    பகீர் குற்றச்சாட்டு

    பகீர் குற்றச்சாட்டு

    1000 பேருந்து வழித்தடங்களை ஒருசில முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகு தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    மீண்டும் பெறுவோம்

    மீண்டும் பெறுவோம்

    அதிமுகவிலிருந்து நிர்வாகிகளை தன்னிச்சையாக நீக்குவது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் அதிகாரத்தால் பெறப்பட்ட சின்னத்தையும் கட்சியையும் மீண்டும் பெறுவோம் என்றும் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவத்துள்ளார்.

    English summary
    TTV Dinakaran supporter Senthil balaji has said that Chief minister Edappadi Palanisami govt will send home within February end. He also criticized palanisami as Koovathur Palanisami.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X