காவிரி: மத்திய அரசின் மவுனம், தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வாரத்திற்குள், மேலாண்மை வாரியத்தை அமைத்து நடைமுறைக்கு கொண்டுவர, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் கடிதம்
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து அவர் விளக்கி கூறியுள்ளார்.

நடவடிக்கை இல்லை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு 4 வராம் ஆகியும், மத்திய அரசிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.

மக்கள் வேதனை
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமரின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்

நீர் முறைப்படுத்தும் குழு
மேலாண்மை வாரியம் அமைக்க நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications