இளையராஜாவுக்கு பெருமையுடன் வாழ்த்து: எடப்பாடி பழனிச்சாமி
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தலை சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும், முறையான பயிற்சியும் பெற்ற இவருக்கு, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது கிடைத்ததற்கு எனது மனமார்த்த வாழ்த்துக்களை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

இதேபோல ராமச்சந்திர நாகசாமிக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததற்கும், கோவை மாவட்டத்தை சேர்ந்த யோகா ஆசிரியர் நானம்மாள், கிராமிய இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், ராஜகோபாலன் வாசுதேவன், விட்டேக்கர் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளதற்கும் வாழ்த்துக்களை முதல்வர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு் பெருமை சேர்த்துள்ளதற்கு, தமிழக மகம்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, தாங்கள் மேன்மேலும் இதுபோன்ற பல விருதுகளை பெற எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications