அனைத்துக்கட்சி கூட்ட விருந்தோம்பல்: எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் உபசரித்த முதல்வர் எடப்பாடியார்!
அனைத்துக்கட்சி கூட்ட விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார்.
Recommended Video

சென்னை: அனைத்துக்கட்சி கூட்ட விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலளார் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தேமுதிக சார்பில் சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக சார்பில் ஏகே மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

கருணாநிதிக்குப் பின்
2007ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கடைசியாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சர்கள் வரவேற்பு
காலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர்களை தமிழக அமைச்சர்கள் வாசலில் நின்று வரவேற்றனர். தமிழக அமைச்சர்களின் இந்த நாகரீக பண்பு பெரிதும் பேசப்பட்டது.

நேரில் உபசரித்த முதல்வர்
இந்நிலையில் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உணவு இடைவேளை அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் அளிக்கப்பட்ட இந்த உணவு இடைவேளை விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார்.

ஆலோசனைகள்
ஒரு மணிநேர உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சிகள் தங்களின் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications