சென்னை: குழந்தைகள் காப்பகத்திற்கு சீல்: 33 குழந்தைகள் மீட்பு
சென்னை: சென்னையில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தை அதிகாரி மூடி சீல் வைத்தனர்.
சென்னை மேடவாக்கம் பகுதியில் நியூ ஹோப் ஆஃப் லைஃப் என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்தக் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இட வசதி, உணவு, பாதுகாப்பு, பராமரிப்பு, கழிப்பிட உள்ளிட்டவை இல்லாமல் 33 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல குழுமம், சமூக நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
புகார்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மை என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த 33 குழந்தைகளும் மீட்கப்பட்டு, அரசு அனுமதியுடன் இயங்கி வரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
பொள்ளாச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வந்த காப்பகத்தில் தங்கியிருந்த பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள காப்பகங்கள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு அடிப்படை வசதியற்ற காப்பகங்களை அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications