அங்கீகாரம் பெறாத குழந்தைகள் காப்பகங்கள் 3 மாதத்தில் மூடப்படும்: தமிழக அரசு
சென்னை: அங்கீகாரம் பெறாத குழந்தைகள் காப்பகங்கள் மூன்று மாதத்தில் மூடப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கிவரும் குழந்தைகள் காப்பகங்களை முறைபடுத்த வேண்டும்.

முறையான அனுமதி பெறாத காப்பகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு மட்டுமல்லாது குழந்கைகள் காப்பகத்திற்கான நிபந்தனைகளையும் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 பரிந்துரைகளை மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு தொடர்பாக சமூக நலத்துறை செய்லாளர்கள், சமூக பாதுகாப்புத்துறை செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தனர். அப்போது மூடப்படும் காப்பகங்களைச் சேர்ந்த குழந்தைகள், வேறு காப்பகங்களுக்கு மாற்றப்படுவார்கள் என தமிழக அரசு உறுதியளித்தது.
மத அமைப்புகள் நடத்தும் காப்பகங்களில் ஆய்வு ஆய்வு நடத்தவும், பெற்றோரின் அனுமதியுடன்தான் அங்கு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கை வருகிற மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications