காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் ரயிலை மறித்த மாணவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் வரும் 5ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் உள்பட இந்திய அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்த 30 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் காமராஜ், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என்று இந்தியா அறிவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் ரயில் மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications