சென்னை ஹைகோர்ட்டுக்கு நாளை முதல் “கிறிஸ்துமஸ் லீவ்” தொடக்கம்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளையில் இருந்து கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கும் காரணத்தினால் அவசர வழக்குகளுக்கான விசாரணை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஹைகோர்ட், தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், "கிறிஸ்துமஸ்' பண்டிகையை முன்னிட்டு, வருகிற 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையிலும் ஹைகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறை நாட்களில், அவசர வழக்குகளை சென்னை ஹைகோர்ட்டில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோரும், ஹைகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோரும் விசாரிப்பார்கள்.
இந்த விடுமுறை நாட்களில், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை நீதிபதிகள் வருகிற 30 ஆம் தேதி ஹைகோர்ட் மற்றும் ஹைகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்கள். எனவே, வழக்குகளை 29 ஆம் தேதிக்குள் ஹைகோர்ட் பதிவு பிரிவில் தாக்கல் செய்யவேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications