தமிழ்நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகள் - அன்று முதல் இன்று வரை
சென்னை: மும்பை, டெல்லி என்று தங்களுடைய கொடூர கைவரிசைகளைக் காட்டிக் கொண்டிருந்த தீவிரவாதிகள் சில காலமாக தமிழ்நாட்டையும், குறிப்பாக சென்னையையும் விட்டு வைக்கவில்லை.
அப்படிப்பட்ட சம்பவம்தான் இன்று நடந்துள்ள சென்னை- சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பும்.மக்கள் அனைவரையும் அச்சத்திலும், பயத்திலும் தள்ளி வேடிக்கை பார்ப்பதில் மகிழும் தீவிரவாதிகளின் களியாட்டத்திற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டாகவே தோன்றுகின்றது.
இதுபோல் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற சில பயங்கர குண்டுவெடிப்புகளின் தொகுப்பு இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளது.

1984 - ஆம் ஆண்டு மீனப்பாக்கம் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.27 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டுவெடிப்பில் தமிழ் ஈழ ராணுவ அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இலங்கை விமானத்தை குறிவைத்து நடத்தப்பட இருந்த இச்சம்பவம், உடைமை அடையாள பிரச்சனையால் மீனம்பாக்க விமானநிலையத்திலேயே நடந்து முடிந்தது.
1991 - மே 21 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ் காந்தி. அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர்.
1998 - ஆம் ஆண்டு, கோவையில் பிப்ரவரி 14-ஆம் நாள் பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களைக் கொலை செய்வதற்காக திட்டமிட்டு நகரின் பல பகுதிகவைக்கப் பட்ட இந்த குண்டுகள் வெடித்ததில் 52 பேர் மரணமடைந்தனர்.
200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இந்த சதி தொடர்பாகக் கைது செய்யப் பட்ட 166 பேர்களில் பெரும்பாலர் அல்-உம்மா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள்.
இந்த சதியின் முக்கிய காரணகர்த்தர்களாக குற்றம் சாட்டப் பட்டு சிறையில் இருந்தவர்களில் கேரளத்தைச் சேர்ந்த அப்துல் நசீர் மதானி மற்றும் தமிழகத்தின் எஸ். ஏ பாட்சா, முகமது அன்சாரி ஆகிய தலைவர்களும் அடக்கம்.
2009 ஆம் ஆண்டு மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.மேலும், ரயில் நிலைய ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
2013 ஆம் ஆண்டு கூடங்குளம் அருகே இடிந்தகரை சுனாமி காலனியில் ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள், நவம்பர் 26-ஆம் தேதி மாலையில் வெடித்துச் சிதறின. இதில் பிரமிளா, சுபிஷ்டன், சுபிதா, வளன், மகிமைராஜ் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.












Click it and Unblock the Notifications