For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவி பலாத்கார வழக்கு- பாதிரியார் கோர்ட்டில் சரண்!!

Google Oneindia Tamil News

Church priest surrenders, fetus exhumed
திருநெல்வேலி; நெல்லை மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

நெல்லை பேட்டை புனிதஅந்தோணியார் ஆலயத்தின் பாதிரியராகவும்,அங்குள்ள பள்ளியின் செயலாளராகவும் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியை சார்ந்த ஞானப்பிரகாசசெல்வம் பணியாற்றி வந்தார்.

இவரிடம் இதே பகுதியை சார்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவி ஒருவர், பாதிரியாரிடம் இசை,மற்றும் கிறிஸ்தவ பாடல் பயிற்சி பெற வந்து சென்றுள்ளார். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாதிரியார் தமது பங்களாவில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்தார்.

அதில் மாணவி 5 மாத கர்ப்பிணியானார். இதைத் தொடர்ந்து பாதிரியார், மருத்துவர் ஒருவர் உதவியுடன் மாணவியின் கருவைக் கலைத்திருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவி போலீசில் புகார் செய்தார்.

இதனால் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இதில் பாதிரியார் ஞானப்பிரகாசசெல்வம் நேற்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் நீதிபதி கீதா முன்பு சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் மதுரை சிறையில் அடைக்க நீதிபதி கீதா உத்தரவிட்டார்.

நெல்லை போலீசார் பாதிரியாரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

English summary
The priest, Selvan, who was on look out for allegedly impregnating a girl who attended a Tirunelveli church choir, surrendered before the judicial magistrate at Uthamapalayam in Theni district on Friday night. He has been remanded to judicial custody for 15 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X