அதிமுக கூட்டம்.. செல்லூர் ராஜு முன்னிலை.. கெத்தாக உட்கார்ந்திருந்த தலைமறைவு அன்புச் செழியன்!
மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் சினிமா பைனான்சியர்அன்புச்செழியன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அன்புச்செழியன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அவருக்கு அரசியலிலும், ஆட்சியிலும் பலத்தில் இருப்பவர்கள் உதவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பார்வையாளர்கள் பிரிவில் முதல் வரிசையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் அன்புச்செழியன்.

வழக்கு நிலுவையில்
அன்புச்செழியனின் முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அன்புச்செழியனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்நிலையில் அதிமுகவின் நிகழ்ச்சியில் அன்புச்செழியன் பங்கேற்றதன் மூலம் அவரை அரசியல் கட்சியினரும், ஆட்சியில் இருப்பவர்களுமே காப்பாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைச்சர் வீட்டு காதணி விழா
ஏற்கனவே கடந்த ஜனவரி 28-ம் தேதி மதுரையில் நடந்த அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரன்கள் காதணி விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முக்கிய தொழில் அதிபர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.

முதன்முதலில் பங்கேற்ற அன்புச்செழியன்
இந்த விழாவில் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சிக்கி வெளியே தலைகாட்டாமல் இருந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டார். இவர் ஏற்கெனவே அதிமுகவில் இருப்பதோடு அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதால் அவர் மீது தற்கொலை வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக அப்போதே சர்ச்சை எழுந்தது.

மீண்டும் செல்லூரார் கூட்டத்தில்
இந்நிலையில் நேற்று மீண்டும் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் அன்புச்செழியன் மீண்டும் பங்கேற்றுள்ளார். தனது இல்ல நிகழ்ச்சியில் அன்புச்செழியன் பங்கேற்றது பற்றி அமைச்ச்ர செல்லூர் ராஜூவிடம் அப்போதே கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் அன்புச்செழியன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் என்ன தவறு என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications