நாளைக்கு சினிமா காட்சிகள் ரத்து... சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் நாளை தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பிற்கு சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முழு ஆதரவை அளித்துள்ளது. இதனையடுத்து நாளை திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை நடைபெற்றது. இந்த கலவரத்தின் போது தமிழக பதிவெண் கொண்ட 100க்கும் மேற்பட்ட பேருந்துகள், லாரிகள், தனியார் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர் சங்கம், பால் முகவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேபோன்று, திமுக, பாமக, தமாக, தேமுதிக, சிபிஐ, மதிமுக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனையொட்டி திரையரங்குகளில் நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு மேல் சினிமா காட்சிகள் திரையிடப்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications