நடத்துனர் இல்லாத பேருந்து சேவை.. அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம்: சிஐடியு சவுந்திரராஜன்
நடத்துனர் இல்லாத போக்குவரத்து சேவை பலனளிக்காது என்று சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை: நடத்துனர் இல்லாத போக்குவரத்து சேவை பலனளிக்காது என சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவர்த்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
கோவையில் நல்லாயன் மண்டபத்தில் நடைபெற்ற சிஐடியு மண்டல மாநாட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்திரராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

மானிய கோரிக்கையில் போக்குவர்த்து கழகத்தை மேம்படுத்தவோ, ஊழியர்களின் பிரச்சனை குறித்தோ போக்குவரத்து துறை அமைச்சர் பேசவில்லை. தொழிலாளர்கள் நிலுவை தொகை ஐந்தாயிரம் கோடியில் இருந்து 6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் நடத்துனர் இல்லாத பேருந்து சேவையை ரத்து செய்ய வேண்டும். நடத்துனர் இல்லாத பேருந்து சேவை அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம்.
தமிழக அரசு போராடுபவர்கள் மீது கடுமையாக பின்பற்றும் அடக்குமுறையை கைவிட வேண்டும். சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து சேவையை துவக்கியுள்ளனர். இந்த சேவை பயனளிக்காது. நாளை சிஐடியு சங்க ஊழியர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு முன் கையில் நடத்துனர் இல்லா சேவையை ரத்து செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பிய பின்னர் பணிக்கு செல்வர்.
தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின் படி நடத்துனர் இல்லாமல் பேருந்துகளை இயக்கமுடியாது. மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரும் போது கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வலுத்தது.
இவ்வாறு சவுந்திரராஜன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications