சென்னை: காருக்குள் மனைவி, குழந்தைகளை வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் கைது
சென்னை: சென்னை நந்தனம் பகுதியில் எரிந்த காருக்குள் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மரணமடைந்தார். கணவரே பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக அந்த பெண் மரண வாக்குமூலம் அளித்ததை அடுத்து போலீசார் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்,33. இவர் மனைவி பிரேமா ,29 மற்றும் மகன்கள் நிஷந்த் ராஜ்6, யுஷ்வந்த்,4 ஆகியோருடன் தனது உறவினர் காரில் நேற்று மாலை சென்று கொண்டு இருந்தார். காரை நாகராஜன் ஓட்டி சென்றார்.

நந்தனம் பகுதியில் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது . உள்ளே சிக்கி கொண்ட பிரேமா அலறி கூச்சலிட்டுள்ளார். பிரேமாவின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்று முடியாமல் போகவே , தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் பிரேமா முழுதும் எரிந்து போனார். உடனடியாக அங்கு வந்த சைதாப்பேட்டை போலீசார் படுகாயத்துடன் இருந்த பிரேமாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்து போனார்.
அவர் மரணத்திற்கு சற்று முன் போலீசாருக்கு அளித்த மரண வாக்குமூலத்தில் தனது கணவர் நாகராஜ் தான் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
காருக்குள் பிரேமாவும் குழந்தைகளும் எரிந்த போது நாகராஜ் எங்கே போனார் என்ற சந்தேகம் எழவே, நாகராஜை கைது போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மனைவி, குழந்தைகளை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக நாகராஜ் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடும் போராட்டத்துக்கு பின்னர் காரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications