அரசு பஸ்களை ஓட்ட முயன்ற அதிமுகவினர்.. தடுத்த போக்குவரத்து ஊழியர்கள்.. 4 டிரைவர்கள் படுகாயம்!
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது எனக் கூறி பேருந்தை இயக்க முயன்ற அதிமுகவினருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த 4 ஓட்டுநர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கத்தினரைத் தவிர மற்ற அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த கருத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப் பட்டு வருகின்றன.

இதன்படி, கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நன்னிலம், பொறையார், சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், மன்னார்குடி, திருவையாறு உள்ளிட்ட டெப்போக்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப் பட்டு வருகின்றன.
நாகப்பட்டினம் டெப்போவில் வழக்கமாக இயக்கப்படும் 72 பேருந்துகளில், இன்று 29 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல், மயிலாடுதுறை டெப்போவில் வழக்கமாக 81 பேருந்துகள் இயங்கும். அதில் இன்று 22 பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றன. மீதி உள்ள பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிற்க வைக்கப் பட்டுள்ளன.
சீர்காழி கிளையில் இயக்கப்படும் மொத்தம் 45 பேருந்துகளில், 19 பேருந்துகளும், பொறையார் கிளையில் 29 பேருந்துகளுக்கு பதிலாக 7 பேருந்துகளும், திருத்துறைப்பூண்டி டெப்போவில் 63 பேருந்துகளுக்குப் பதிலாக 21 பேருந்துகளும் இயக்கப் பட்டு வருகின்றன. வழக்கமாக மன்னார்குடி டெப்போவில் இருந்து 67 பேருந்துகள் இயங்கும். இன்றோ 27 பேருந்துகள் மட்டுமேஇயங்குகின்றன.
இப்பேருந்துகளையிம் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலரும், புதிதாக பணியில் சேர்க்கப் பட்ட ஓட்டுநர்களுமே இயக்குவதாகக் கூறப்படுகிறது. அண்ணா தொழிற்சங்கத்தினர் சிலர் இந்தப் போராட்டத்திற்கு உடல்நிலைச் சரியில்லை என்றும், விசேஷங்களுக்குச் செல்கிறோம் என்றும் காரணங்களைக் காட்டி பேருந்து இயக்க வராமல் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேதாரண்யத்தில் போராட்டம் குறித்து அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் ஓய்வு அறையில் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், பேருந்துகள் இயக்கம் முற்றிலும் தடை பட்டது.
இதனால், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கருதிய அதிமுகவினர் சிலர் பேருந்துகளை இயக்க முயற்சித்துள்ளனர். இதனால், போக்குவரத்து ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில், நடராஜன், அழகேசன் உள்ளிட்ட நான்கு ஓட்டுநர்களுக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications