அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயருகிறது... முதல்வரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் 30 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம்
இதையடுத்து 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 30 சதவீதம் வரை உயருகிறது.

அதிகபட்சம் எவ்வளவு
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் வெளியிட்ட அரசாணையில், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.6,100 பெற்றவர்களுக்கு இனி ரூ. 15,700-ம் அதிகப்பட்ச ஊதியமாக ரூ.77,000 பெற்றவர்களுக்கு இனி ரூ.2.25 லட்சமும் உயர்த்தி வழங்கப்படும். அதாவது 2.57 மடங்கு ஊதியம் அதிகரித்துள்ளது.

எத்தனை கோடி
அதேபோல் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும். இதன் மூலம் 12 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். ஊதிய உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.8016 கோடியும், ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக ரூ.6703 கோடியும் என அரசுக்கு மொத்தம் ரூ .14,719 கோடி செலவாகும்.

பணிக்கொடையும் உயர்வு
தொகுப்பூதியம், மதிப்பூதியம் பணியாளர்களுக்கும் 30 சதவீத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ10 லட்சம் வழங்கப்பட்ட பணிக்கொடை ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் என அனைத்து துறைகளிலும் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.3000-ஆகவும், அதிகபட்சமாக ரூ.11,100-ஆகவும் உயர்த்தியுள்ளது.

இந்த மாதம் முதல் தேதி
இந்த ஊதிய உயர்வு 2016-ஆம் ஆண்டு கருத்தியலாக அமல்படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த மாதம் ஒன்றாம் தேதி பணப்பயனாக வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications