ஓகி புயல்.. மீட்புப் பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்.. முதல்வர் உத்தரவு
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கெள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் இன்று (30.11.2017) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு அமைச்சர் மற்றும் இந்திய ஆட்சி பணியாளர் நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் நியமித்து மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1204 கி.மீ. நிளத்திற்குண்டான மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.10.31 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டது.
விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 299 கி.மீ. நீளத்திற்கு புதியதாக மழைநீர் வடிகால்வாய்கள் ஐளுறுனு உலக நிதித்திட்டம் மூலம் கட்டப்பட்டன. மேலும், ரொபோடிக் எக்ஸ்கவேட்டர் மற்றும் ஆம்பிபியன் என்னும் நவீன இயந்திரங்கள் மூலம் 16,000 டன் அளவிற்கு ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் தூர் வாரப்பட்டுள்ளது. விடுபட்ட மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் புதிய மழைநீர் கால்வாய்கள் 92 இடங்களில் கட்டப்பட்டது.
தற்போது பெய்த மழையினாலும் மற்றும் சேவைத் துறையினரால் மேற்கொண்ட பணிகள் காரணத்தினாலும் சேதமடைந்துள்ள 225 சாலைகளில் 180 டன் கோல்ட் மிக்ஸ் (உடிடன அiஒ) கலவை கொண்டு 1,452.71 சதுர மீட்டருக்கு ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில் ஒட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது, 22 சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இனிவருங்காலங்களில் சாலைகளில் பள்ளங்கள் ஏற்படும்பட்சத்தில் அதனை மூடி நிரப்புவதற்கு 100 டன் கோல்ட் மிக்ஸ் கையிருப்பில் உள்ளது.

பெருநகர சென்னை மாநகரில் 30.10.2017 முதல் 30.11.2017 இன்று காலை வரை நேரத்தில் 73.05 செ.மீ. அளவு மழை பதிவாகி உள்ளது. அதில், நேற்று (29.11.2017) காலை முதல் இன்று காலை 8.30 மணி வரை 5.89 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையினால் கண்ணன் காலனி, பாரதிதாசன் நகர், உதயம் நகர், பூங்கா அவென்யூ 2வது தெரு, எம்.சி.என். நகர், ராஜீவ் நகர் போன்ற 109 இடங்களில் தேங்கிய மழைநீர் 46 மோட்டார் பம்புகள் மூலம் உடனடியாக 27 இடங்களில் அகற்றப்பட்டு மீதமுள்ள 82 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி இடைவிடாது நடைபெற்று வருகிறது. இதுவரை மழையின் காரணமாக விழுந்த 118 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்று மரங்கள் ஏதும் விழவில்லை.
மழைநீர் வடிகால்வாய் இல்லாத இடங்களில் 16 ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே தேங்கி நிற்கும் கால்வாய் அடைப்புகளும் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கு 25 டிப்பர் லாரிகளும், 235 காம்பெக்டர், 11 பாப்காட் இயந்திரங்கள் என மொத்தம் 287 வாகனங்கள் மழைநீர் அகற்றும் பணியில் உள்ளன. ஒரு ஆம்பிபியன் வாகனம் மற்றும் மூன்று எக்ஸ்வேட்டர் இயந்திரங்கள் மூலம் பல்வேறு நீர்வழித்தடங்களில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 4171 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 3,61,765 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக நேற்று 29.11.2017 அன்று 29 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1,486 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
வடக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 129 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளது. சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலம் 15 மண்டலங்களுக்கும் ஒரு மேற்பார்வை பொறியாளர் மற்றும் ஒரு செயற் பொறியாளரும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர சிறப்பு பொது குறைதீர்க்கும் மையம் தொலைபேசி எண். 4567 4567 செயல்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், 044-2536 7823, 2538 4965, 2538 3694 ஆகியவற்றின் வழியாக 12,947 புகார்கள் பெறப்பட்டு 12,729 புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 218 புகார்களுக்கு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கூவம் மற்றும் அடையாறு ஆற்றுபடுக்கைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் அகற்றும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சி.ஆர்.ஆர்.டி அறிக்கையின்படி ஆற்றுபடுக்கைகளில் உள்ள 5,383க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளுக்கு மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.ஊரகப் பகுதிகளில் உள்ள 21609 சிறுபாசன ஏரிகள் மற்றும் 48758 ஊரணிகள் / குளங்கள் / குட்டைகள் உள்ளிட்ட 70367 நீர் ஆதார அமைப்புகளில் உடைப்புகள் ஏற்படா வண்ணம், கரைகள் பலப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கூடுதலாக மழைபெய்து வருவதால், இம்மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வெள்ளத் தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும், இம்மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்ற மாநில அளவில் கூடுதல் இயக்குநர் நிலையில் உள்ள ஒரு அலுவலரை நியமனம் செய்து உடன்சென்று பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த துறை தலைவர்களுக்கு அனுப்பு உத்தரவிட்டார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பெய்து பெரும் மழையின் காரணமாக, வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள பணியாளர்களை ஈடுபடுத்தவும் அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தின் போது, நகர்ப்புரம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றுவாரிய மேலாண்மை இயக்குநர் சத்திய பிரத சாகு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சிகள் துறை இயக்குநர் கா.பாஸ்கரன், ஊரக மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநர் சீதாலட்சுமி, பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மை தலைமை பொறியாளர் புகழேந்தி, கண்காணிப்பு பொறியாளர் நந்தகுமார், நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் இயக்குநர் செபாஸ்டின் மற்றும் தலைமை பொறியாளர் வெங்கடாசலம், பேரூராட்சிகளின் இயக்க கூடுதல் மலைமான் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் இராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications