காவிரி பிரச்சினை: மார்ச் 8ல் சட்டசபை கூட்டம் - சிறப்பு தீர்மானம்
காவிரி நதிநீர் பிரச்சினைக்காக மார்ச் 8ஆம் தேதியன்று சட்டசபை கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டசபையில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதன்படி மார்ச் 8ஆம் தேதியன்ற சட்டசபை கூட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசிய ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி பேசி நேரம் கேட்டும் பிரதமர் சந்திக்க மறுக்கிறார். அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுப்பதால் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தாம் வலியுறுத்தியுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து திங்கட்கிழமை வரை காத்திருக்கலாம் என முதலமைச்சர் கூறியுள்ளதாகவும், திங்கள் கிழமைக்குள் பிரதமரிடமிருந்து அழைப்பு வராவிட்டால் வருகிற 8ம் தேதி சட்டமன்றம் கூட்டப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் அனைத்து கட்சியினரை சந்திக்க மறுத்தால் அதிமுகவின் ராஜ்யசபா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் திமுகவை சேர்ந்த 4 எம்.பிக்கள் உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்துவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமைக்குள் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்காவிட்டால் மார்ச் 8ஆம் தேதி சட்டசபை கூட்டப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சட்டசபை கூட உள்ள நிலையில் சிறப்பு தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications