ஜூன் மாதம் சீனா செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... ஏற்பாடுகள் தீவிரம்
Recommended Video
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜூன் மாதம் சீனா செல்லவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், அங்குள்ள தொழிலதிபர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைக்கவும் முதல்வர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
அவருடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரும் சீனா செல்ல உள்ளனர்.

முதல்வர் டூர்
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்று வந்த நிலையில், அடுத்ததாக வரும் ஜூன் மாதம் சீனா செல்ல உள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு சீன தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்புவிடுக்க இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

ஒப்புதல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வதற்கு தேவையான அனுமதியை மத்திய அரசு தந்துவிட்டதால் பயண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நீர் மேலாண்மை பற்றி அறிய இஸ்ரேல் செல்லவிருந்த முதல்வரின் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனம்
சீனாவிலிருந்து செல்போன் நிறுவனங்கள், மின் சாதன பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகள் முதல்வரின் இந்த பயணம் மூலம் தமிழகத்தில் கிளையை நிறுவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

பாராட்டு
கடந்த அக்டோபர் மாதம் தமிழகம் வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழகத்தின் அன்பான உபசரிப்பாலும், கலாச்சாரத்தாலும் தாம் நெகிழ்ந்ததாக பாராட்டிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications