அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவ பொக்கிஷம் அறிமுகம் செய்து வைத்த ஜெ
சென்னை: தாய்மையடைந்த பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவ பொக்கிஷத்தை' இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கி அறிமுகம் செய்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த ஜெயலலிதா, மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தவிர்க்க மாதுளை மணப்பாகு மற்றும் கருவேப்பிலை பொடி அளிக்கப்படும்.

இரும்புச்சத்து அதிகரிக்க அடுத்த மூன்று மாதங்களின் போது தாய்க்கு ஏற்படும் இரும்பு சத்து மற்றும், வைட்டமின் சத்து குறைபாட்டை நீக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை போன்றவை அளிக்கப்படும்.
கடைசி மூன்று மாதங்கள் கடைசி மூன்று மாதங்களின் போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றை குறைக்க உளுந்து தைலத்தையும்; சுக மகப்பேறுக்கு குந்திரிக தைலம் மற்றும் பாவன பஞ்சங்குல தைலத்தையும் பயன்படுத்தலாம் என்றார்.
அம்மா மகப்பேறு சஞ்சீவி
ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தை பிறப்புடன் முடிந்து விடுவது இல்லை. குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய் சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம்; இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம், குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார்.
அம்மா சிரஞ்சீவி மருத்துவப் பொக்கிஷம்
அதன்படி இன்று 11 சித்த மருந்துகள் கொண்டதுதான் அம்மா சிரஞ்சீவி மருத்துவப் பொக்கிஷம் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த பொக்கிஷத்தை தாய்மையடைந்த பெண்கள் முழு ஆரோக்கியத்துடன் இருந்து சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க தமிழக அரசு வழங்குவதாகத் தெரிவித்துள்ள ஜெயலலிதா, காணொளிக் காட்சி மூலம் 5 கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த பொக்கிஷத்தை மாதிரியாக வழங்கி திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளார்.
குழந்தை நல பரிசு பெட்டகம்
ஏற்கனவே, குழந்தைப் பெற்ற பெண்களுக்கு, குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கி வருகிறது. ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் 'சௌபாக்கியா' சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் ஆகிய 16 வகையான பொருட்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications