பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை... ஆனாலும் சில தனியார் பள்ளிகள் மூடல்!
சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை. வழக்கம்போல பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்றனர்.
சென்னை நகரில் உள்ள சில தனியார் பள்ளிகள் மட்டும் இன்று இயங்கவில்லை.
சென்னை அப்பல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் உடல்நிலையைக் காரணம் காட்டி இன்று (திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. காலை வரை பள்ளிகளைத் திறப்பதா இல்லையா என்ற குழப்பம் நிலவிய நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதே நேரம் அப்பல்லோ மருத்துவமனையைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிரச்சினைக்குரிய பகுதிகளில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மட்டும் இன்று திறக்கப்படவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications