அடையாறில் ராமச்சந்திர ஆதித்தனார் சாலை பெயர்ப் பலகை: திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா!
சென்னை: தமிழ் பத்திரிகையுலக ஜாம்பவான், தமிழ் உணர்வாளர் பா ராமச்சந்திர ஆதித்தனார் பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர்ப் பலகையை இன்று திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற பணியாற்றிய பா. இராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு செய்ய வேண்டும் என்பது தம் விருப்பம் என்று முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

மேலும், மாலை முரசு நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன், தனது தந்தை பா.இராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலைக்கு, அவரது பெயரை சூட்டிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை" என பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகர மேயருக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை" என புதிதாக பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர்ப் பலகையை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை திறந்து வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications