சுட்டதற்குப் பதில் கைது செய்திருக்கலாமே... ஆந்திர அரசுக்கு ஓ.பி.எஸ். கேள்வி
சென்னை : ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் இன்று காலை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பலியானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழக- ஆந்திரா எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டி.ஜி.பி. அசோக்குமார், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, அரசு ஆலோசகர்கள் ராமானுஜம், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், 'செவ்வாய்க்கிழமை காலை, ஆந்திர மாநிலம் சேஷசாலா வனப் பகுதியில், செம்மரக் கடத்தல் கும்பல் மீது ஆந்திர மாநில வனத்துறையினர் நடத்திய மிக மோசமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 20 பேர் துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பலரும் தமிழகத்திக் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவர்கள் மீது இப்படி ஒரு மோசமான தாக்குதலை வனத்துறையினர் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் நேர்மையான விசாரணையை நடத்திட வேண்டும் என்றும், இதில் எந்த வகையிலாவது மனித உரிமை மீறல் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வழி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications