பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ் மலர் தூவி மரியாதை!
பசும்பொன்: முத்துராமலிங்கத் தேவரின் 107 ஆவது பிறந்தநாளான இன்று அவருடைய நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 107 ஆவது பிறந்த நாள் மற்றும் 52 ஆவது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனையடுத்து அங்குள்ள தேவரின் நினைவிடத்தில் பல்வேறு கட்சித்தலைவர்களும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்துவதற்காக பசும்பொன் கிராமத்தில் குழுமியுள்ளனர்.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று காலை, தேவரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மலர் தூவி, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முதல்வராக பதவியேற்ற பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆடம்பரமில்லாமல் மிகவும் அமைதியான முறையில் தேவர் நினைவிடத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வந்தார்.












Click it and Unblock the Notifications