சோவின் மறைவிற்கு ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: மறைந்த துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சோவின் மறைவு பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு என்று முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலமில்லாமல் இன்று அதிகாலை அப்போலோ மருத்துவமனையில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி உயிரிழந்தார். அவரது உடல், எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து சோவிற்கு மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உடன் சென்றனர்.

பின்னர், சோ ராமசாமி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "மறைந்த ஜெயலலிதாவின் மீது அளவற்ற பாசமும், அன்பும் கொண்டவர் சோ. சோவின் மறைவு பத்திரிகை துறைக்கு மிகப்பெரிய இழப்பு" என்று முதல்வர் கூறியுள்ளார்.
அவரது உடலுக்கு, திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications