ஜெ., படத்தின் முன்னிலையில் பாராலிம்பிக் தங்க மகன் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி நிதி அளித்த ஓபிஎஸ்
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி நிதியை தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்தார்.
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.
மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு சார்பில் அப்போதய முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடியை பரிசாக அறிவித்தார். ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை. பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. மாரியப்பனின் சாதனை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பரிசு பணத்தை பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை கூறியிருந்தார் மாரியப்பன். ஆனால் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மாரியப்பன் நேற்று தனது பயிற்சியாளர் சத்யநாராயணா உடன் சென்னை வந்தார். போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார் மாரியப்பன். அப்போது தன்னுடைய தங்கப்பதக்கத்தை காண்பித்தார். அதை வாங்கி ஜெயலலிதா படத்தின் முன்பாக மாரியப்பனின் கழுத்தில் அணிவித்தார் ஓ.பன்னீர் செல்வம். இதனையடுத்து ரூ.2 கோடிக்கான காசோலையை முதல்வர் வழங்கினார். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ரூ. 2 கோடியை பெற நினைத்த மாரியப்பனுக்கு தற்போது ஜெயலலிதா படத்தின் முன்பாக அவரை சாட்சியாக வைத்து நிதியை வழங்கினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications