வறுமையின் பிடியில் தேயிலை விவசாயிகள்... காப்பாற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை : வறுமையின் பிடியில் சிக்கியுள்ள தேயிலை விவசாயிகளை காப்பாற்ற அதிமுக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது...

மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள தேயிலை விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். பச்சைத் தேயிலையின் விலை தொடந்து குறைந்து வருவது, கடந்த மூன்று வருடங்களாக பச்சைத் தேயிலைக்கு உரிய ஆதார விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் இந்த விவசாயத்தை நம்பியிருக்கும் 65.000 குடும்பங்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
தேயிலை விவசாயிகள் தங்களின் பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கட்டணங்களைக் கட்ட முடியவில்லை. அவர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடனையும் அடைக்க முடியவில்லை. தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலையைக் கொடுத்தாலும் அவர்களும் உரிய விலையைக் கொடுப்பதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வற்புறுத்தலால் முன்பு ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு 2 ரூபாய் என்று மத்திய அரசு கொடுத்து வந்தது. அந்த மான்யமும் இப்போது கிடைப்பதில்லை. பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய கண்காணிப்புக் குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டும், இதுவரை அது போன்றதொரு குழு அமைக்கப்படவில்லை.
இது குறித்து பல முறை தேயிலை விவசாயிகள் முறையிட்டும் இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குறியது. ஆகவே தேயிலை விவசாயிகளையும், அவர்களது குடும்பங்களையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக, தேயிலை விவசாயிகள் பெற்ற 107 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடனை கழக அரசு முன்பு தள்ளுபடி செய்தது போல், இப்போதும் அவர்களின் பயிர்கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் பசுந்தேயிலைக்கு உரிய ஆதார விலை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications