மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குட்நியூஸ்.. 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ரூ. 48 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்துள்ள நிலையில், மயிலாடுதுறைக்கு 8 புதிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், ரூ. 48 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்துக்கான 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1. மயிலாடுதுறை நீடூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ. 85 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
2. சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பனுக்கு உருவசிலை நிறுவப்படும்.
3. தாழம்பேட்டை, வெண்ணக்கோவில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படும்.
4. குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
5. மங்கநல்லூர் - ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் 2 வழி சாலையாக மேம்படுத்தப்படும்.
6. சீர்காழி நகராட்சியில் உள்ள தேர்கீழ வீதி உள்ளிட்ட 4 இடங்களில் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.8 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
7. சீர்காழிக்கு ரூ.5 கோடி செலவில் நகராட்சி அலுவலகம் கட்டி தரப்படும்.
8. பூம்புகார் துறைமுகத்தில் ரூ.4 கோடியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications