“உங்கள மாதிரி நாங்க அடிச்சிக்கல“.. பாய்ந்த எடப்பாடியை ஆஃப் செய்த முதல்வர் ஸ்டாலின்! குறுக்கே ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, காவல்துறை, தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

CM Stalin spicy debate with EPS and OPS in assembly on admk fight issue

எடப்பாடி குற்றச்சாட்டு : சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டபோது, காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பிரதான எதிர்க்கட்சி அதிமுகவின் தலைமை அலுவலகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயற்சித்தனர். தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் காவல் துறை வழங்கவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த பிரச்சனை உட்கட்சி விவகாரம். வெளியே நடந்த சம்பவத்துக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு கொடுத்தார்கள். உள்ளே நடந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல." எனத் தெரிவித்தார்.

CM Stalin spicy debate with EPS and OPS in assembly on admk fight issue

நாங்க அடிச்சிக்கலயே : பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவில் இதேபோல ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது அறிவாலயத்திற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், "அன்றைய தினம் நாங்கள் உங்களைப் போல ஒன்றும் அடித்துக்கொள்ளவில்லை" என்றார்.

அப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, "சட்டமன்றத்தில் பிரச்சனை வேறு திசையை நோக்கி செல்கிறது. அன்று நடந்த சம்பவம் வேதனை அளிக்கக்கூடியது. தலைமைக்கழகம் சென்று அமைதியாக அமர வேண்டும் என்று தான் சென்றோம். தலைமைக் கழகத்திற்கும் இந்தியன் வங்கிக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருந்த நிலையில், 300 பேர் தலைமைக் கழகத்திற்கு பூட்டு போட்டுவிட்டு சாலையில் அமர்ந்திருந்தனர்.

மேடை போட்டு சொல்ல ரெடி : இந்தியன் பேங்க் வரும்போது பெரிய கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. அன்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை யார் செய்தது என்பதை காவல்துறை விசாரித்து வருகிறது.

CM Stalin spicy debate with EPS and OPS in assembly on admk fight issue

யார் அத்து மீறியது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறை பொறுப்பு. யார் வெறியாட்டம் நடத்தினார்கள் என்பதை தனி மேடை போட்டு கூட பேசத் தயாராக இருக்கிறேன். அதிமுக பொதுக்குழு நடந்தபோது 8 மாவட்ட செயலாளர்கள் அதிமுக தலைமைக்கழகத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?" எனக் கேள்வி எழுப்பினார் ஓபிஎஸ்.

காரசார விவாதம் : அதன்பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, "இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறும் என்று கருதிதான் காவல் நிலையத்தில் முன்னதாகவே புகார் அளித்தோம். காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது" என்று தெரிவித்தார்.

பின்னர் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடக்கிறது. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் - முதல்வர் ஸ்டாலின் இடையே நடந்த இந்த காரசார விவாதத்தால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+