மிதக்கும் சென்னை... களமிறங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.
சென்னை: சென்னை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு வருகிறார். ஆர்.கே. நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் நகர் புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார். ஆர்.கே. நகர் தொகுதியில் நிவாரணம் மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிச்சாமி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினார்.
முதல்வருடன் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உடன் சென்றனர்.
இந்த நிலையில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு,நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 4 நாட்களில் கீழே விழுந்த 55 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
இதனிடையே சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மாலைக்குள் மின் சேவை சீராகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தொடர் காரணமாக சென்னையின் 1541 வழித்தடங்களில் 128 வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications